டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - கடகம்

Webdunia
புதன், 30 நவம்பர் 2016 (20:07 IST)
காலங்களும், காட்சிகளும் மாறினாலும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! 5-ந் தேதி வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 7-ம் இடத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

ராஜ தந்திரத்தை பயன்படுத்தி பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலமாக தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால் 6-ந் தேதி முதல் செவ்வாய் 8-ல் சென்று மறைவதால் சிறுசிறு விபத்துகள், நெருப்புக் காயங்கள், முன்கோபத்தால் இரத்த அழுத்தம், சகோதர வகையில் சங்கடங்கள், சொத்துப் பிரச்னைகள், பணத்தட்டுப்பாடுகளெல்லாம் வந்துச் செல்லும்.

5-ல் நிற்கும் சனி நிற்பதால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். அவர்களின் வருங்காலம் குறித்த கவலைகளும் வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

3-ந் தேதி வரை 6-ல் சுக்ரன் மறைந்திருப்பதுடன், புதனும் 6-ல் சென்று மறைந்திருப்பதால் காய்ச்சல், சளித் தொந்தரவு, நரம்புச் சுளுக்கு, தொண்டைப் புகைச்சல், மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்துச் செல்லும். வாகனத்தை மெதுவாக இயக்குங்கள். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஆனால் 4-ந் தேதி முதல் சுக்ரன் 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் உற்சாகமடைவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். மனைவியுடனான மோதல்கள் குறையும். அவரின் ஆரோக்யமும் சீராகும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மீது திடீர் அக்கறை காட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தோலில் நமைச்சல் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். கலைத்துறையினரே! பகட்டாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். கிசுகிசு தொந்தரவுகளும் வரக்கூடும். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதமிது.
அடுத்த கட்டுரையில்