நோய்களை தீர்க்கும் அற்புத தன்வந்திரி மந்திரம் !!

Webdunia
பாற்கடலில் தோன்றிய ஸ்ரீ தன்வந்திரி பெருமாளே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக விஷ்ணு புராணம் கூறுகின்றது.

இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற அரிய தத்துவத்தை இந்த வைத்திய அவதாரம் சுட்டிக்காட்டுகிறது. 
 
காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், மஹா விஷ்ணுவின் அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்,முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும், ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார்.

தன்வந்திரி மந்திரம்:
 
ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய 
த்ரைலோக்ய நாதாய , 
ஓம் ஸ்ரீமஹா விஷ்ணவே நம 
 
தன்வந்திரி ஸ்லோகம்:
 
சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.
 
அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில் 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் குளித்து விட்டு நெற்றியில் குங்குமம் இட்டு தன்வந்திரி படத்திற்கு முன்னால் ஒரு பித்தளை சொம்பில் கழுத்து வரை நீர் நிரப்பி அதில் ஒரு கொப்பு துளசி இலை போட்டு கையால் மூடிக்கொண்டு 1008 முறை பாராயணம் செய்து, தூபம் தீபம் ஏற்றி சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பின் தன்வந்திரி படத்திற்கு முன்னால் ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அந்த நீரை வியாதியஸ்தருக்கு கொடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்