சினிமா - 2018 ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளிவர காத்திருக்கும் 2.ஓ

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (16:58 IST)
ரஜினி இரு வேடங்களில் நடிக்க ஷங்கர் பிரமாண்டமாக இயக்கிய படம் எந்திரன். சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்தது. அதன் இரண்டாம் பாகத்தை லைக்கா தயாரிக்க ஷங்கர் ரஜினியை வைத்து இயக்குகிறார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் நடிக்கயிருக்கும் எந்திரன் 2 படத்தின் பெயரை மாற்றினர். எந்திரன் 2 என சொல்லப்பட்ட படத்தின் பெயரை தற்போது 2.ஓ என  மாற்றினர்.

மதராச பட்டினம் படத்தின் முலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பிறகு இந்தி பட உலகிலும் கால்  பதித்தார். தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார்.
 
இந்தியாவிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் 2.0. ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர்  நடிக்கும் இப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்கி வருகிறார். வரும் பொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப்  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ ஆகியவை ஏற்கனவே வெளியாகி அனைவரையும் பிரம்மிப்படையச் செய்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27 ஆம் தேதி மிகப்  பிரம்மாண்டமாக துபாய்யில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் நடைபெற்றது இதற்காக படக்குழுவினர் துபாய் சென்றனர்.
 
துபாயில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குநர் சங்கர், “2.ஓ படம் எந்திரன் படத்தின் தொடர்ச்சி  இல்லை,” எனத் தெரிவித்துள்ளார். இதுவரையில் எந்திரன் படத்தின் தொடர்ச்சி என கருதப்பட்ட 2.ஓ படம் தற்போது எந்திரன்  படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2.ஓ திரைப்படம் ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு புதிய சாதனைப்  படைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை எந்தப் படமும் இவ்வளவு பெரும் தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டதில்லை. இது  இந்தியாவில் அதிக செலவில் தயாராகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாக  ரூ. 350 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்ட படமாக ரஜினியின் 2.ஓ விளங்குகிறது.
 
திட்டமிட்டபடி, ரஜினியின் 2.ஓ ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. பின்னர்  ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' திரைப்படம் வரும் ஜனவரி 25ல் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் லைகா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் அறிக்கை ஒன்றில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சங்கர் கூட்டணியில் உருவான திரைப்படம் 2.ஓ திரைப்படத்தின் புரொமோஷன் பணிக்காக அப்படக்குழுவினர் உலகம் சுற்ற தயாரானது. இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். இசை ஏ.ஆர். ரகுமான். 2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.  3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று  வருகின்றன.
 
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள '2.0' பட புரொமோஷன் நிகழ்ச்சி மூலம் உலகளவில் கவனம் ஈர்க்கும் விதமாக அங்குள்ள ஹாலிவுட் ஸ்டுடியோவில் ரஜினி-அக்ஷய் குமாரின் புகைப்படங்கள் கொண்ட 100 அடி ராட்சத பலூன், விளம்பரத்துக்காக வைக்கப்பட்டுள்ளன. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஓர் இந்திய படத்தை விளம்பரம் செய்வது இதுவே முதல்   முறையாகும்.
2.0 பட விளம்பரத்துக்காக லண்டனில் பறக்கவிடப்பட்டுள்ள இந்த ராட்சத பலூனை துபாய், சான் பிரான்சிஸ்கோ, தெற்காசிய  நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என உலகம் முழுவதும் பறக்கவிடவும் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்