ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனை துளிகள்..!

Webdunia
தர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே.
அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகுதான் பாடத்தை போதிக்கும்.
 
துன்பத்தை நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.
 
வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு பிரியாது. உனக்குள்ளே பார் புரியும். கண்களால் பார்க்கத்தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான்  வழியை காட்ட முடியும்.
 
உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள்  பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள்.
 
செல்லும் பாதையில் செற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால், அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் மட்டுமே உணரப்படுவது.
 
பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அதை நீயே செய். மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள்  உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்