காலையிலேயே வீட்டை பெருக்குவது ஏன் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (07:25 IST)
தினசரி காலையும், மாலையும் வீடுகளை அடித்து பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் என மூத்தவர்கள் சொல்லி கேட்டிருப்போம். இது வெறுமனே சுத்தத்திற்காக மட்டும் சொல்லபட்டது அல்ல. வீட்டை பெருக்குவதன் பின்னே பெரும் ஆசாரமே அடங்கியுள்ளது.

காலை வேளையில் வீட்டையும் வாசலையும் அடித்துப் பெருக்கி சுத்தப்படுத்த வேண்டும் என்பது ஆசாரம்.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது அன்னை பகவதி பாற்கடலில் இருந்து தோன்றினாள். அப்போது அவளை வரவேற்க யாரும் தயாராகவில்லை. தனிமையில் இருந்த அவள் சிவபெருமானிடம் நான் எங்கே தங்குவேன் என்று கேட்டாள் அவளுக்கு பதிலளித்த சிவபெருமான் அவன் எங்கெல்லாம் தங்கலாம் என்று பல இடங்களைச் சுட்டிக் காட்டினார்.

அவ்வாறு சுட்டிக்காட்டிய இடங்களில் பெருக்காத இடமும் உள்படும். அடித்துப் பெருக்கிச் சுத்தம் செய்யாத இடங்களில் பகவதி வாசம் செய்வாள். அந்த பகவதியை அவலட்சுமியாகக் கருதுகிறார்கள். அவள் இருக்கும் இடத்திற்கு லட்சுதிதேவி வருவதில்லை. லட்சுமி வரவேண்டுமென்றால் அடித்து பெருக்கி சுத்தம் செய்தால் பகவதி அங்கிருந்து மறைந்து லட்சுமி குடியேறுவாள்.

அதிகாலையில் அடித்துப் பெருக்கி சாணநீர் தெளிக்க ஐஸ்வர்ய தேவதையான லட்சுமி வாசம் செய்வதற்காகத்தான் வீடு வாசலை அடித்துப் பெருக்கி சுத்தம் செய்கிறோம். அவ்வாறு செய்யாதவர்கள் வீட்டில் மூதேவி குடியிருக்கும்.

சுத்தமும். ஐஸ்வர்யமும் நிலைத்து நிற்பதற்கு தினமும் இரண்டு நேரம் (காலை, மாலை) வீடு வாசலை அடித்துப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டுமென்பது ஆசாரம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்