காதலியுடன் சின்ன சண்டை: வடபழனி மால் 3வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் பலி

Webdunia
புதன், 18 அக்டோபர் 2017 (07:21 IST)
சென்னை வடபழனியில் உள்ள மால் ஒன்றின் 3வது மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



 
 
வேலூரை சேர்ந்த யுவராஜ் என்பவர் நேற்று தனது காதலியுடன் சென்னை வடபழனியில் உள்ள மால் ஒன்றுக்கு சென்றார். அங்குள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றில் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே சின்ன சண்டை வந்துள்ளது. இதனால் திடீரென மூட் அவுட் ஆன யுவராஜ் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார். 
 
இதுகுறித்து யுவராஜின் காதலியிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். யுவராஜ் காதலி கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பதாகவும் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. மாலின் சிசிடிவி காட்சியை கைப்பற்றியுள்ள போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்