வயநாடு பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து கேரளாவை இளைஞர் தத்ரூபமாக மினியேச்சர் உருவம் உருவாக்கியுள்ளார்

J.Durai
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (15:17 IST)
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கோர நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்த நிலையில் பலரையும் காணாமல் இனியும் தேடி வருகின்றனர்.
 
மீட்பு குழுவினர் இதுவரை 360க்கும் மேற்பட்ட சடலங்கள் முழுதாகவும் பகுதியாகவும் கண்டெடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது மேலும் உறவினர்கள் இல்லாத சடலங்களை கேரளா அரசே... தகனம் செய்தது.....
 
இந்நிலையில் வயநாட்டில் நடைபெற்ற கோர நிலச்சரிவு குறித்து கேரளாவை சேர்ந்த டாவின்சி சுரேஷ் என்ற இளைஞர் தத்ரூபமாக மினியேச்சர் முறையில் பொதுமக்கள் கண்டு புரிந்து கொள்ளும் அளவில் வயநாடு பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து உருவம் ஒன்றை உருவாக்கியுள்ளார் இதில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சதுர வடிவிலான பைப்புகள் மற்றும் பிளைவுட் கள் சிறிய கற்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி நிலச்சரிவு நடந்த பகுதி எப்படி இருக்குமோ அதே போல் தத்துரூபமாக உருவாக்கியுள்ளார்.
 
மேலும் அதில் டாவின்சி சுரேஷ் கூறியுள்ளது கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவு வெள்ளரி பாறை பகுதியில் இருந்து ஒரு நதியானது ஏற்கனவே இருந்தவை வெள்ளரிப்பாறையில் தான் முதலில் வெள்ளம் அதிவேகத்தில் புறப்பட்டது என்றும் அந்த வெள்ளம் புன்சிறி மட்டம் முண்டக்கை பிரதேசம் வெள்ளாறு மலை பள்ளி சூரன் மலை ஆகிய ஏழு கிலோமீட்டர் தூரத்தை துவசம் செய்தது என்று அதில் அதில் கூறியுள்ளார் இந்த மினியேச்சர் உருவத்தை உருவாக்க ஐந்து நாட்கள் தேவைப்பட்டது
என்றும் இதில் கூறியுள்ளார்.
 
கேரளா வயநாடு நிலச்சரிவு குறித்து சாதாரண பொது மக்களுக்கு இது விளக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் மேலும் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதியை பார்ப்பதைவிட மேலிருந்து வயநாடு கோர விபத்து நடந்த பகுதிகளை காண்பிக்கும் வகையில் இந்த இனிய உருவத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் டாவின்சி சுரேஷ்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்