பெண்களைக் கவர பைக் ரேஸ் ...இளைஞர்களை அடித்த மக்கள் ! வைரல் போட்டோ

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (19:42 IST)
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த லட்சுமி புரத்தில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக பைக் ரேஸ் ஓட்டிச் சென்றுள்ளனர். அதை கண்டித்து அந்த ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களைப் செல்போனில் படம் பிடித்த 3 இளைஞர்களை போராட்டக்காரர்கள் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுயுள்ளது.
முன்னதாக பைக்கில் வேகமாகச் சென்ற இளைஞர்களை தட்டிக்கேட்ட முரளி என்பவர் தாக்கப்பட்டார்.தினமும் தெருவில் பைக் ரேஸுல் இளைஞர்கள் ஈடுபடுவதாகவும் அதனால் மக்களுக்கு அச்சம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் போலிஸாரிடம் கோரிக்கை வைத்தனர். 
 
அப்போது அந்த வழியே வந்த இளைஞர்கள் அவர்களைப் செல்போனில் படம் பிடித்தனர். அந்த இளைஞர்கள் எதிர் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் ஆவர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும்போல் தங்களைக் காட்டிக்கொள்வதற்காக அவர்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.
 
இந்த சம்பவத்தில் பைக்ரேஸ் ஓட்டிச் சென்றதாக 3 இளைஞர்களை பொதுமக்கள் தாக்கினர். பின்னர் போலீஸார் சம்பவ இடத்திலிருந்து இளைஞர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 
 
மேலும் அந்தப் பகுதியில் உள்ள பெண்களைக் கவர்வதற்காக இதுபோன்று பைக்ரேஸில் ஈடுபடுவதாகவும் தகவல்  வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்