சைட் அடிக்கவே மாணவர்கள் போராட்டம்: பிரபல நடிகரின் சர்ச்சை கருத்து!

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (12:44 IST)
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள் ஒரு கருத்து தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கலை நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி வைத்த நடிகர் ஒய்ஜி மகேந்திரன் அதன் பின்னர் பேசிய போது ’இன்றைய இளைஞர்கள் பெண்களை சைட் அடிக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார். மேலும் அரசியலுக்கு ரஜினி அரசியலுக்கு வந்தால் தனக்கு சந்தோஷம் என்றும் அரசியல்வாதிகள் மாணவர்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்
 
மாணவர்களுக்குப் குறித்து ஒய்ஜி மகேந்திரன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு நெட்டிசைன்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ரஜினிகாந்த் கூறிய வன்முறை குறித்த சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில் அவருடைய சகலை ஒய்ஜி மகேந்திரன் கூறியது தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்