என் மகன் செய்தது சரி என்று நான் கூறவில்லை, தப்புதான். ஆனால் அதே நேரத்தில், மருத்துவர் பாலாஜி என்னை ஆங்கிலத்தில் திட்டுவார். எனக்கு என்ன நோய் என்பதையே அவர் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு சிகிச்சை அளிப்பதில் அவர் தாமதப்படுத்தினார். அதனால் தான் என் மகன் ஆத்திரப்பட்டு கத்தியால் குத்திவிட்டார் என்று கைதான விக்னேஷின் தாயார் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் மேலும் கூறிய போது, "நான் ஏதாவது சந்தேகம் கேட்டால், 'இங்கு யார் மருத்துவர்?' என மரியாதை குறைவாக மருத்துவர் பாலாஜி பேசுவார். தனியார் மருத்துவமனையில் என்னை காப்பாற்ற முடியாது என்று கூறி விட்டதால்தான் என் மகன் மன உளைச்சலால் இந்த மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், இங்கே உள்ள மருத்துவர் 25 ஆண்டுகள் அனுபவம் இருந்தும் எனக்கு என்ன நோய் என்பதே கண்டுபிடிக்கவில்லை," என்றும் அவர் கூறினார்.
எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் என்னை முறையாக கவனிக்கவில்லை. என் மகன் செய்தது சரி என்று நான் கூறவில்லை. ஆனால் அதே நேரத்தில், மருத்துவர் பாலாஜி மீது எனக்கும் கடும் கோபம் உள்ளது; அவர் என்னை ஆங்கிலத்தில் திட்டுவார்," என்று கூறியுள்ளார்.