திருவண்ணாமலை தீபத்திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா? இன்று முடிவு!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:07 IST)
திருவண்ணாமலையில் கார்த்திகை மாத தீப திருவிழா நடத்துவது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு திருவண்ணாமல தீபத்திருவிழா நடைபெறுமா என்பது சந்தேகமாக இருந்தது. மகா தீபத் திருவிழா மற்றும் தேரோட்டம் ஆகியவற்றை நடத்தக்கோரி விஷ்வ ஹிந்து பரிசத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பதிலளித்த கோயில் நிர்வாகம் இந்துசமய அறநிலையத்துறை, காவல்துறை ஆகியவர்களுடன் ஆலோசனை நடத்தி இன்று முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதைக்கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்