தேமுதிகவுடன் கூட்டணி அமைக்குமா ம.நீ.ம ... கமல்ஹாசன் சூசகம்

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (16:18 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகள் தங்கள் கூட்டணி விவரத்தை வெளிட்டு விட்டனர்.
ஆனால் தேமுதிக தான் கூட்டணிக்கு வரமுடியாமலும், தனியாக தேர்தலில் நிற்க முடியாமலும் இருக்கிறது. சமீபத்தில் என்றும் இல்லாத அதிசயமாக ஸ்டாலின் கூட விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். பின்னர் ஸ்டாலின் கூறும் போது விஜயகாந்தின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்கான மனதநேயமிக்க சந்திப்பு என்றார். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா எங்கள் கட்சியுடம் இரு கட்சிகளும் கூட்டணி குறித்து பேசி வருகிறது என்றார்.
 
இந்நிலையில் தேமுதிக அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் விரும்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றி வருகிறது.
 
இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்  நாடாளுமன்ற தேர்தலில் விருப்ப மனுக்கள் இன்றுமுதல் பெறும் பெறப்படும் என்றார்.
 
மேலும் தேமுதிகவுடன் கூட்டணி அமையுமா என்று கேட்டதற்கு  தான் சென்னைக்கு சென்ற பின்னர் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
 
தாம் போட்டியிடும் தொகுதி குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் . இந்த விரும்ப மனுக்களை தருபவர்களுக்கு இதுகுறித்த திறமைகள் தகுதிகள் இருக்க வேண்டும் என்றார்.இந்த வேட்பாளர்களை நானும் சமுதாய மக்களும் இணைந்து தேர்வு செய்வோம் இவ்வவாறு அவர் தெரிவிதார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்