தமிழகத்தில் இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பிருக்கிறதா? சுகாதாரத்துறை செயலர் பதில்!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (15:21 IST)
தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை செய்லாளர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில் அத்ற்கான வாய்ப்புகள் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் அதே போல ஊரடங்கு அமல்படுத்தப் படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ‘அதுகுறித்து இப்போது என்னால் கூற முடியாது. தொற்று அதிகமாக உள்ள இடங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அனைவரும் இரண்டு வாரங்களுக்கு முகக்கவசங்கள் அணிந்தால் தொற்றைக் குறைக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்