உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனாவால் பாதிப்பு!

புதன், 14 ஏப்ரல் 2021 (14:35 IST)
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
நேற்று வெளியான தகவலின்படி உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பை கருதி முதல்வர் யோகி தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாக செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு எடுத்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவரின் அறிவுரைப்படி முதல்வர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்
 
இதனால் அவர் சில நாட்கள் முதல்வர் அலுவலகத்துக்கு செல்ல மாட்டார் என தெரிகிறது. ஏற்கனவே ஒரு சில மாநில முதல்வர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது உபி முதல்வருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்