கணவனுக்கு தெரியாமல் கர்ப்பமான மனைவி: குழந்தை பிறந்ததும் கொலை செய்த கொடுமை!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (19:25 IST)
கணவனுக்கு  தெரியாமல் கர்ப்பமான மனைவி கணவருக்கு தெரியாமல் குழந்தையை பெற்று அந்த குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கேரள மாநிலம் இடுக்கி அருகே சுஜாதா என்ற பெண்ணுக்கு கடந்த 10ஆம் தேதி குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை அவர் வாளி தண்ணீரில் மூழ்கி கொலை செய்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுஜாதாவிடம் நடத்திய விசாரணையில் தான் கர்ப்பமாக இருப்பது கணவர் மற்றும் உறவினர்கள் தெரியாது என்பதால் குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார் 
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்