தனபாலை திவாகரன் முதலமைச்சர் ஆக்க நினைப்பது ஏன்?

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (04:40 IST)
தினகரன் அணியினர்களின் தற்போதைய கோரிக்கை முதல்வரை மாற்ற வேண்டும் என்பதுதான். இந்த கோரிக்கையை எடப்பாடியார் ஏற்பாரா? என்று தெரியாத நிலையில் திவாகரன், திடீரென சபாநாயகர் தனபால் அவர்களை முதல்வராக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தனபால் பெயரை அவர் குறிப்பிடுவது ஏன் தெரியுமா?



 
 
ஜெயலலிதாவின் குட்புக்கில் தனபால் பெயர் தான் முதலில் இருந்ததாம். அதனால்தான் அவரை சபாநாயகர் பதவிகொடுத்து அழகு பார்த்தாராம். எனவே ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் தனபாலை முதல்வராக்க திவாகரன் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது
 
ஆனால் உண்மையெனில் தனபால் சொன்னால் உடனே ஓகே என்று கேட்கும் வகையில் 34 எம்.எல்.ஏக்கள் உள்ளார்களாம். எனவே அவரது பெயரை கூறினால் நிச்சயம் மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்பதால் திவாகரன் அவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்