தீபக் யாரென்று எனக்கு தெரியாது? தம்பிதுரை

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (14:30 IST)
ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் யாரென்று தெரியாது என மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.




 

 
டிடிவி தினகரனை எதிர்த்து ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் ஓ.பி.எஸ்.க்கு ஆதர்வு தெரிவித்தார். சசிகலாவை ஜெயலலிதாவிற்கு சமமாக மதிக்கிறேன். அவர் குடும்பத்திலிருந்து வேறு யாரும் கட்சிக்கோ, ஆட்சிக்கோ வருவதை நானும், கட்சி தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.
 
இதையடுத்து ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த தீபா தனது வீட்டின் ஒரு பகுதியை கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளார். இந்த புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைப்பெற்றது. தீபா தனி பேரவை தொடங்கியுள்ளார். இன்று மாலை அவரது கட்சி கொடி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது சசிகலா தரப்புக்கு எதிராக மூன்று முக்கிய புள்ளிகள் களமிறங்கியுள்ளனர். இதனால் அதிமுக சற்று அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை மக்களவைத் துணை தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தீபக் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தீபர் என்றால் யார்? அவர் அதிமுக-வில் உள்ளாரா? அவர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்