ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற டிஆர் பாலுவுக்கு இந்த முறை அந்த தொகுதி கிடைக்காது என்றும் வேறு தொகுதி தான் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு மொத்தத்தில் சீட்டு இல்லை என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முறை திமுக வேட்பாளர்களை தேர்வு செய்வது அமைச்சர் உதயநிதிதான் என்றும் அவர் புதிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் எனவே டிஆர் பாலுவுக்கு சீட் இல்லை என்ற முடிவை உதயநிதி எடுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
ஆனால் அதே நேரத்தில் கட்சியின் சீனியர் என்ற முறையில் டி ஆர் பாலுவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தங்கள் கட்சிக்கு வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் அவரது மகனை அந்த தொகுதியில் நிறுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி டிஆர் பாலுவின் கையைவிட்டு போய்விட்டதாகவே திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.