தள்ளி வைக்கப்பட்ட ப்ளஸ் 2 தேர்வு எப்போது?

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (12:01 IST)
12 பொதுத்தேர்வுக்கான மாற்று தேதி 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. மேலும் நேற்று வெளியான தமிழக அரசு உத்தரவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் தேர்வுக்கான மாற்று தேதி 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதேபோல ஜூன் மாதத்தில் தேர்வு நடக்கும் என எதிர்ப்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்