இப்படி ஊரடங்கு போட்டா நாங்க என்ன பண்றது? – சிறு வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!

திங்கள், 19 ஏப்ரல் 2021 (10:39 IST)
தமிழகத்தில் சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பி தெரிவித்து கொடைக்கானல் சிறு வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா தளங்களை நம்பி தொழில் நடத்தி வந்த சிறு வணிகர்கள், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் மெல்ல சுற்றுலா தளங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் சிறு வணிகர்களின் தொழிலும் மெல்ல உயர்ந்தது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா தளங்களை மூட உத்தரவு வெளியாகியுள்ளது. இதனால் தங்கள் பொருளாதாரம் மேலும் அதிகமாக பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் சுற்றுலா தள சிறு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்