விஜய் மாநாடு நடத்துவதில் திமுகவுக்கு என்ன பிரச்சினை? - த.வெ.க கூட்டணி குறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்!

Prasanth Karthick
வியாழன், 5 செப்டம்பர் 2024 (14:12 IST)

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்படாதது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

நடிகர் விஜய்யின் ‘தி க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக கொண்டு வரப்படுவதற்காக சமீபத்தில் நடிகர் விஜய் அனுமதி பெற வேண்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று நடிகர் விஜய்யின் கோட் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பிரேமலதா விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் “நடிகர் விஜய்யின் கோட் படத்திற்கு எனது வாழ்த்துகள். விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுகவிற்கு என்ன பிரச்சினை? கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே நாள் இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த, மாநாடு நடத்த எல்லாருக்கும் உரிமை இருக்கும்போது அதை ஏன் மறுக்கிறீர்கள். யார் வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது” என பேசியுள்ளார்.
 

ALSO READ: சர்ச்சையை கிளப்பிய 'GOAT' படத்தின் தலைப்பு.! விசிக - பாஜக இடையே கருத்து மோதல்..!!
 

மேலும் விஜய்யின் கட்சியோடு தேமுதிக கூட்டணி அமைக்குமா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் “விஜய் மாநாடு நடத்தி, கட்சி துவங்கி, கொள்கை, செயல்பாடுகளை அறிவித்த பிறகுதான், அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்