தமிழகத்தில் திமுக அரசு மகளிருக்கு மாதம் ரூ.1000 என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த நிலையில் அந்த வாக்குறுதியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நிறைவேற்றி வருகிறது என்பதும் தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.
தமிழகத்தில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து பல மாநிலங்களில் மகளிருக்கு மாதம் பணம் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது மேற்குவங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுகந்து அதிகாரி என்பவர் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மகளிர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திமுக அறிமுகம் செய்த மகளிருக்கு உரிமை தொகை என்ற திட்டம் தற்போது படிப்படியாக இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பாஜகவும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.