வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (10:21 IST)
விழுப்புரம் மாவட்டம் விற்பட்டு கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.  
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்த நிலையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
 
இந்நிலையில் இன்று (9 ஆம் தேதி) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆம், இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். 
 
ஆனால் விழுப்புரம் மாவட்டம் வல்லம் அருகே உள்ள விற்பட்டு கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.  விற்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக பிரித்து கொடுக்கவில்லை என கூறி மக்கள் யாரும் வாக்களில்ல வராமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்