தேமுதிகவை விட்டுச் செல்வது துரோகம் - விஜயகாந்த்

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (11:45 IST)
100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிவிட்டரில் பதிவு. 

 
மேலும் அவர தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நமது கழகம் (தேமுதிக)என்றென்றும் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும். கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். 
 
நமது கழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மூளைச்சலவை செய்வோரின் பேச்சு, ஆடை வார்த்தையை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது துரோகம். மாற்று கட்சிக்கு செல்வோர் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் வரும். 
 
எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். தேமுதிக வேரூன்றவும், வளர்ச்சி பாதையை நோக்கி செல்லவும் தொண்டர்களின் உறுதுணை தேவை என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்