விஜயகாந்த் கட்சி ஆபிஸ் இடிப்பு? ஏன்? எதற்கு?

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (19:01 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மண்டபமான ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபத்தை இடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜய்காந்த் தனது பெற்றோரின் நினைவாக கட்டிய திருமண மண்டபன் ஆண்டாள் அழகர் மண்டபம். இது சென்னை கோயம்பேட்டில் உள்ளது. 
 
ஏற்கனவே, திமுக கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுவதற்காக இந்த மண்படத்தின் பாதியை இடித்தது. விஜயகாந்த் மண்டபத்தை இடிக்காமல் பாலத்தை அமைக்க மாற்று திட்டத்தை வழங்கிய போதும் அதை ஏற்காமல் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி செயல்பட்டதன் காரணமகவே விஜய்காந்த கட்சியை துவங்கி அரசியலில் களமிரங்கினார். 
அதன் பின்னர் மீதமுள்ள இடத்தைதான் தேமுதிக கட்சி அலுவலகமாக மாற்றினார். இந்த மண்டப இடிப்பு விவகாரமே விஜய்காந்த் திமுகவிற்கு எதிராக செய்லபட முக்கிய காரணமாகவும் இருந்தது என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் தற்போது மத்திய அரசு கோயம்பேட்டில் மெட்ரோ ரயிலை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக கடைகல் வீடுகள் ஆகியவை விலைபேசப்பட்டு வருகிறது. இதில் அதிர்ச்சி என்னவெனில் இந்த திட்டத்தால் விஜயகாந்த் மண்டபமும் இடிக்கப்படவுள்ளதாம். 
 
அதாவது, விஜய்காந்த் மண்டபம் இருக்கும் இடத்தில்தான் மெட்ரோ ரயில் நிலையமே அமையுள்ளதாம். சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்