7 பேர் விடுதலை காலதாமதம்: தமிழக ஆளுநருக்கு விஜயகாந்த் கண்டனம்!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (08:45 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரமுள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து, தமிழக அரசு அளித்த பரிந்துரையை 2 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார்.
 
இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட தமிழக எதிர் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், 7 பேர் விடுதலையை காலதாமதம் செய்த தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததோடு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார். 
 
மேலும் கூறிய அவர்,  இந்த விவகாரம் குறித்து ஆளுநர் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் அவரின் இந்த முடிவு வேதனை அளிக்கிறது. எனவே காலதாமதம் இன்றி 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்