புத்தக கண்காட்சி சிறப்பு பேச்சாளர்கள்.. விஜய் டிவி ராமர் பெயர் திடீர் நீக்கம்..!

Mahendran
திங்கள், 9 செப்டம்பர் 2024 (17:24 IST)
மதுரை புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் விஜய் டிவி ராமர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தகக் காட்சி நிறைவு விழாவின் போது சிறந்த பேச்சாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்பது வழக்கம் என்ற நிலையில் தற்போது மதுரையில் நடைபெற்று வரும் புத்தக விழாவின் இறுதி நாளில் இறையன்பு ஐஏஎஸ், மதுரை எம்பி வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், லியோனி, பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் அழைக்கப்பட்டனர்.

அவர்களுடன் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் விஜய் டிவி பிரபலம் ராமர் அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஒரு புத்தக விழாவில் புத்தகம் சார்ந்த எழுத்து நபர்களை மட்டும் அழைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன.

இதனை அடுத்து இந்த விவகாரம் சர்ச்சை ஆனதால் நிகழ்ச்சி பங்கேற்போர்  பட்டியலில் இருந்து விஜய் டிவி ராமர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மேலும் விளம்பரத்தில் அவருடைய புகைப்படமும் அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ராமர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்