மக்கள் திலகத்தின் மறு உருவமே - மதுரையை கலக்கும் விஜய் போஸ்டர்கள்!

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (13:59 IST)
நடிகர் விஜய்யை எம் ஜி ஆர் போல சித்தரித்து மதுரையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
 
சமீபகாலமாக விஜய்யை வடிவமைத்து போஸ்டர்கள் ஒட்டுவது அதிகமாகி உள்ளது. கடந்த வாரம் விஜய்யை எம் ஜி ஆர் போலவும், அவர் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் வடிவமைத்த போஸ்டர் பரபரப்பைக் கிளப்பியது. 
 
இந்த முறை விஜய்யை எம் ஜி ஆர் போல சித்தரித்து ‘மக்கள் திலகத்தின் மறு உருவமே விரைவில் வருக நல்லாசி தருக. ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்?” என்ற வாசகங்களோடு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் மதுரை சுவர்களை கலக்கி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்