பெரியார் நினைவு தினத்தில் மரியாதை செய்த விஜய்.. வைரலாகும் புகைப்படம்..!

Mahendran
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (12:57 IST)
இன்று பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல்வாதிகள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பெரியார் குறித்த நினைவுகளை பதிவு செய்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் தனது சமூக வலைதளத்தில் பெரியார் குறித்து கூறியிருப்பதாவது:

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்கு சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர்  எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்.

மீண்டும் பனையூரில் உள்ள தனது அலுவலகத்திலேயே பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்தியதாகவும் பெரியார் நினைவிடத்திற்கு செல்லாதது குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்