செல்போன் சார்ஜரை கழற்றியபோது பாய்ந்த மின்சாரம்! – மாணவன் பரிதாப பலி!

Webdunia
புதன், 25 மே 2022 (08:38 IST)
வேலூரில் பள்ளி மாணவன் ஒருவர் செல்போனை சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சின்னஅல்லாபுரத்தில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், கோபிநாத் என்ற 9 வயது மகனும் உள்ளனர். செந்தில் குடும்பத்தினர் கிருஷ்ணகிரியில் வசித்து வந்துள்ளனர்.

சமீபத்தில் பள்ளி விடுமுறை காரணமாக மகன் கோபிநாத்துடன் வேலூரில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு பானுமதி செல்போனை சார்ஜ்ஜ் போட்டுள்ளார். குளித்து விட்டு வந்த சிறுவன் கோபிநாத் செல்போனை எடுக்க சார்ஜரை கழற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் அலறி மயங்கி விழுந்துள்ளான்.

உடனே சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் கோபிநாத் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்