சொந்த ஊரில் வசந்தகுமார் எம்பியின் இறுதிச் சடங்குகள்: ஏராளமானோர் பங்கேற்பு

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (10:08 IST)
சொந்த ஊரில் வசந்தகுமார் எம்பியின் இறுதிச் சடங்குகள்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி எம்பியுமான வசந்தகுமார் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும் இணை நோய்கள் காரணமாக நேற்று முன்தினம் மாலை காலமானார். அவருடைய மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் ஏராளமான திரையுலகினர் தொழிலதிபர்கள் அவருடைய மறைவிற்கு தங்களது வருத்தத்தைத் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் நேற்று வசந்தகுமாரின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் என்ற கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை வசந்தகுமார் எம்பியின் உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச்சடங்குகள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது 
 
இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் வசந்தகுமார் எம்பி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக வசந்தகுமாரின் உடல் எடுத்துச் செல்லப்படும் என்றும் அங்கு அவரது உடல் முறைப்படி அடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்