ஆண்டாள் குறித்து எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அதுகுறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து தனது கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.
தமிழகம் முழுவதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கங்கணம் கட்டிக்கொண்டு வைரமுத்துவுக்கு எதிராக களத்தில் இறங்கியது. எப்போதும் இல்லாத அளவுக்கு ஜீயர்கள் போராட்டத்தில் குதித்தனர். வைரமுத்துவுக்கு எதிராக ஆபாச வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. அவருக்கு பொதுக்கூட்டங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து வைரமுத்து மீது பழ வழக்குகளும் தொடரப்பட்டது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஆண்டாள் பற்றி எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், அரசியல் கலந்த மதத்திற்காகவோ அல்லது மதம் கலந்த அரசியலுக்ககவோ தன்னுடைய கருத்து தவறாக திரிக்கப்பட்டு விட்டது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.