வைரமுத்துக்கு போன் போட்டு வம்பிழுக்கும் பாஜக கல்யாணராமன்! (வீடியோ இணைப்பு)

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (17:39 IST)
ஆண்டாள் குறித்து வைரமுத்து ஆற்றிய கட்டுரை குறித்தான சர்ச்சை இன்னமும் முடிந்தபாடில்லை. இதனை பாஜகவினர் பூதாகரமாக்கி வருகின்றனர். வைரமுத்துவை வரம்பு மீறி விமர்சிக்கின்றனரோ என தோன்றுகிறது.
 
வைரமுத்து அது குறித்தான உரிய விளக்கமும் அளித்துள்ளார். மேலும் அது தொடர்பாக மன்னிப்பும் கேட்டுள்ளார். ஆனால் பாஜகவினர் அதனை விட்டபாடில்லை. தொடர்ந்து அவரை சீண்டியே வருகின்றனர்.
 
இந்நிலையில் தன்னை பாஜகவை சேர்ந்தவர் என கூறிக்கொள்ளும் கல்யாணராமன் என்பவர் வைரமுத்துவுக்கு போன் போட்டு விளக்கம் கேட்கிறார். அதற்கு வைரமுத்து தனது கருத்துக்கு உரிய விளக்கத்தை பொறுமையாக கூறுகிறார்.
 
அதனை கேட்டு ஒப்புக்கொண்ட கல்யாணராமன் அந்த கட்டுரையை படிக்காமலே தொடர்ந்து வைரமுத்துவை விமர்சிக்கிறார். இந்த போன் கால் தொடர்பான ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்