அமெரிக்க அதிபர் போல் ஆக நினைக்கிறார் பிரதமர் மோடி: வைகோ குற்றச்சாட்டு

Mahendran

வெள்ளி, 13 டிசம்பர் 2024 (14:26 IST)
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் போல் ஆக நினைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
 
திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய வைகோ, கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை மக்கள் கொந்தளிக்க வேண்டிய பிரச்சனை ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது. இது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது. எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரே தேர்தல் என்பது இல்லை. மூன்று மாநில அரசுகள் கவிழ்ந்து விட்டது என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? இது எப்படி சாத்தியம்?
 
இதில் உள்ளாட்சி தேர்தலையும் சேர்த்து நடத்துகிறார்கள். உள்ளத்தில் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு இந்த சட்டத்தை அறிவித்துள்ள இந்திய பிரதமருக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்.
 
பிரதமர் பதவிக்கு பதிலாக அமெரிக்க அதிபரை போல அதிபராகிவிடலாம் என்ற எண்ணம் பிரதமர் மோடிக்கு உள்ளது. ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற மனப்பான்மை பிரதமரிடம் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்க மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று அவர் கூறினார்.
 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்