மூதறிஞர் ராஜாஜி பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ராஜாஜி 1952 முதல் 54 வரை முதல்வராக இருந்தார் என்பதும் பாரத ரத்னா உள்பட பல விருதுகளை பெற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி ராஜாஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று அவருடைய பிறந்த நாளை அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ராஜாஜியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழில் அவர் கூறியிருப்பதாவது:
திரு ராஜகோபாலாச்சாரியாரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்கிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவரது மகத்தான பங்களிப்புக்காகவும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.
பன்முக ஆளுமையாக இருந்த அவர், நிர்வாகம், இலக்கியம், சமூகத்திற்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒவ்வொரு இந்தியருக்கும் கண்ணியமான, செழிப்பான வாழ்க்கையை உறுதி செய்ய ராஜாஜியின் கொள்கைகள் நம்மை ஊக்குவிக்கின்றன.