கர்நாடக முதல்வரின் மேகதாது அணை அறிவிப்புக்கு வைகோ கண்டனம்

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (14:50 IST)
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த போது அதில் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்தார். இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
பெங்களூரு குடிநீர் மின் உற்பத்தி திட்டமான மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா உறுதியாக உள்ளது என்றும் அதற்கு தேவையான நிதி ஒதுக்க தயாராக இருக்கிறது என்றும் முதல்வர் பசவராஜ் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
 
ஏற்கனவே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது இந்த நிலையில் கர்நாடக மாநில பட்ஜெட்டில் மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தது கடும் கண்டனத்திற்குரியது என்றும் நடுவர் மன்ற தீர்ப்பையும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறும் செயல் இது என்றும், இதை அனுமதிக்க கூடாது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்