12 மணிக்குள் தீர்ந்துவிடும்... மீண்டும் தடுப்பூசிக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (11:01 IST)
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்று பகல் 12 மணிக்குள் அனைத்து தடுப்பூசிகளும் தீர்ந்துவிடும் என தகவல். 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததாகவும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசி தொகுப்புகளை சரியாக தரவில்லை என்றும் தமிழக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதன் பின்னர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இந்த நிலை சீரானது. 
 
இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இன்று பகல் 12 மணிக்குள் அனைத்து தடுப்பூசிகளும் தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் அனைவரும் தடுப்பூசி போட தயாராக இருந்தாலும் தடுப்பூசி இருப்பில் இல்லை என்ற நிலைதான் உள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்