ரேசன் கடையில் உளுந்து வழங்க முடியாது: சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ!

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (12:12 IST)
விலைவாசி உயர்வின் காரணமாக ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு உளுந்து வழங்க முடியாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
 
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இன்றைய கூட்டத்தின் கேள்வி நேரத்தின் போது ரேசன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்கப்படுவதில்லை என சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதில் அளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, 19200000 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் உளுந்தம்பருப்பு கிலோ 170 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்நிலையில் மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கிவந்த உளுந்தம்பருப்புக்கான மானியத்தை நிறுத்தி விட்டது.
 
இதன் காரணமாக அரசுக்கு மாதம்தோறும் 207 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படுவதால், ரேசன் கடைகளில் உளுந்தம்பருப்புக்கு வழங்க முடியவில்லை என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்