சமீபத்தில் வங்க கடலில் உருவான புயல் கரையை கடந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து கரையை தொடர்ந்து. இந்நிலையில் இன்று முதல் 15ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியின் பல பகுதிகளின் பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 13 முதல் 16ம் தேதிக்குள் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற பெரும்பாலும் வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.