இளம்பெண் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு பரிந்துரைந்த உ.பி,முதல்வர்

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (21:21 IST)
சமீபத்தில்  உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை சில பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை அடுத்து, ஹத்ராஸ் பகுதிக்  காவல்துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை பெற்றோரிடம் கொடுக்காமல் எரித்தனர்.

போலீஸார் எதற்காக பெண்ணின் சடலத்தை எரித்தனர் என்ற கேள்வி எழுந்தநிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சில உத்தரவுகளை நேற்றுப் பிறப்பித்தார்.

இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தச் செயலைக் கண்டித்து இன்று எம்.பி ராகுல்காந்தி  தலைமையில் ஹர்த்ராஸ் பகுதிக்குச் சென்றனர். அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற அம்மாநில முதல்வர்  பரிந்துரை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்