பிரதமர் மோடி மீது அவதூறு பரப்பிய உபி முதியவர் சென்னையில் கைது!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (21:00 IST)
பிரதமர் மோடி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் எல்லைமீறி அவதூறு செய்து வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே
 
அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 65 வயது முதியவர் மன்மோகன் மிஸ்ரா என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை மாதவரத்தில் தங்கி இருந்த நிலையில் அவர் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சென்னை மாதவரத்தில் தங்கியிருந்த அந்த முதியவரை கைது செய்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்