இனிமேல் அப்படி பேசமாட்டேன்… ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:31 IST)
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தேடப்பட்டு வந்த கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

கன்னியாக்குமரியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கடந்த 18ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் மற்றும் பாரத பிரதமர் உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானதால் போலீஸார் தேடி வந்த நிலையில் மதுரை அருகே உள்ள கொட்டாம்பட்டியில் ஜார்ஜ் பொன்னையாவைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று அவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தில் ‘இனிமேல் கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக நான் பேசமாட்டேன்’ எனப் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்