திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (14:09 IST)
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியில் வசித்து வந்த சரத்குமார் என்ற இளைஞர்  தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியைச் சேர்ந்த சிவா- அமிர்தா தம்பதியரின் இரண்டாவது மகன் சரத்குமார்(26).

இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில்  தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரை கூறிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன் பைக்கில் வீட்டில் இருந்து சென்ற சரத்குமார் நேற்று வீட்டிற்குத் திரும்பவில்லை. இதையடுத்து தன் தங்கைக்கு போன் செய்து, தான் இறக்கப்போவதாகக் கூறியதுடன், தன் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறக்கப்போவதாக பதிவிட்டுள்ளார்.

அதன்பின்னர், ஜாப்ராபேட்டை பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் அவரது பைக் கண்டெடுக்கப்பட்டது.

தீயணைப்புத்துறையினரின் உதவியுடன்  கிணற்றில் சரத்குமார் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்