தமிழகத்தில் கலவரம் வெடிக்கும்: கொக்கரிக்கும் மத்திய அமைச்சர்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (13:49 IST)
இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
கன்னியக்குமரி மாவட்டத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாக மாறி கலவரம் வெடிக்கும் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மீண்டும் தனது முந்தைய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். ஒரு இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டால், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராட மாட்டார்களா?. எனவே தான் தமிழகத்தில் கலவரம் வர வாய்ப்பு உண்டு என எச்சரிக்கை தான் செய்தேன் என்றார்.
 
மேலும் ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரியில் இந்து தலைவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. மேற்குவங்ம் மாநிலத்தின் சூழ்நிலை தமிழகத்தில் வர வேண்டும் என விரும்புகிறார்களா. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்