எஸ்.பி.வேலுமணி இடத்தில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (08:41 IST)
எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் தற்போது வரை கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல். 

 
முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி வீட்டில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது என்பது இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
800 கோடி ரூபாய்க்கும் மேலான டெண்டர்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
ஆம், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் தற்போது வரை கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இவை சென்னையில் உள்ள சந்திர பிரகாஷ் என்பவரது கே.சி.பி. இன்ஃப்ரா நிறுவனத்தில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.2 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்