இமிடியட்டா டெல்லி பறக்கும் உதயநிதி: எதற்காக தெரியுமா?

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (18:05 IST)
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை டெல்லி செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் கண்மூடித்தனமான தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றன. 
 
அந்த வகையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு ஆறுதல் கூற டெல்லிக்கு சென்ற கனிமொழி அவர்கள் சந்தித்து பேசினார். தற்போது இதனைத்தொடர்ந்து டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்களை நாளை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்