பச்சை துரோகம்... ஆளும் அரசை சாடிய உதயநிதி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (09:26 IST)
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு மாணவர்களுக்கு பச்சை துரோகம் இழைத்துள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
உதயநிதி குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்வழி பயின்ற மாணவருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு என்பது கலைஞரின் 2010 ஆணை. அதை நீர்த்துப்போக செய்த அடிமைகள், ஓனர் உத்தரவுப்படி TNPSC தேர்வுகளுக்கு வட மாநிலத்தோர் விண்ணப்பிக்கலாம் என்று விதிகளை திருத்தி தமிழக இளைஞர்களுக்கு பச்சை துரோகம் செய்தனர். 
 
எனவே, 2019ல் கழக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றதும் நடந்த முதல் கூட்டத்தில் தலைவர் ஸ்டாலின் அறிவுரைப்படி 'தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழருக்கே முன்னுரிமை' என தீர்மானமே நிறைவேற்றினோம். எங்கள் குரலுக்கு தமிழக இளைஞர்களும் வலுசேர்த்தனர்.
 
ஒரு பக்கம் தமிழர்களின் வேலைகளை வட மாநிலத்தவர்களுக்கு திறந்துவிட்டு, சாமானிய தமிழ் இளைஞர்களுடைய அரசுவேலை கனவின் நம்பிக்கையான TNPSC-யை மோசடியால் சீரழித்த எடுபுடிகள், பின் எதிர்ப்புக்கு அஞ்சி கலைஞரின் திட்டத்தை லேசாக மாற்றி 'சட்டத்திருத்தம்' எனும் பெயரில் ஆளுநருக்கு அனுப்பினர். 8 மாதங்கள் ஆகியும் ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. 
 
தலைவர் ஸ்டாலின், கேள்வி கேட்டபிறகே தேர்தலை சுட்டிக்காட்டி, ஒப்புதல் வாங்கியுள்ளனர். கலைஞர் உறுதிப்படுத்திய உரிமையை சலுகையாக தருகிறது அடிமை அரசு. இந்த சுயநல கும்பலால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மலரவுள்ள கழக அரசு நீதி வழங்கும் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்