அதிமுகவை வைத்து ஒரு ஐபிஎல் மேட்சே நடத்தலாம்: உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..!

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (14:25 IST)
அதிமுக தற்போது பல அணிகளாக பிரிந்து இருக்கிறது என்றும் அந்த அணிகளை வைத்து ஒரு ஐபிஎல் போட்டி நடத்தலாம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.

 திருச்சியில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற தலைப்பின் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு புத்தக புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது முதலமைச்சரின் ஐம்பது வருட உழைப்பை இந்த கண்காட்சியில் நாம் பார்க்கிறோம் என்றும் ஒவ்வொரு முறையும் இந்த கண்காட்சியை பார்க்கும்போது வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்.

அதன் பின் அதிமுகவில் உள்ள அணிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் அதிமுகவில் எத்தனை அணிகள் உள்ளது என்று யாருக்கும் தெரியாது என்றும் ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி டிடிவி அணி சசிகலா அணி என பல அணிகள் இருப்பதால் இந்த அணிகளை வைத்து ஒரு ஐபிஎல் மேட்ச் நடத்தலாம் என்றும் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்