தாத்தா டிவி கொடுத்தார், அப்பா செட்டாப் பாக்ஸ் கொடுப்பார்! உதயநிதி ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (22:28 IST)
திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும் மக்களுக்கு இலவசங்களை கொடுத்து கொடுத்து அவர்களை சிந்திக்க விடாமல் செய்துவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இலவசங்கள் குறித்த அறிவிப்பு அதிகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் கிராம சபை மீது திடீர் அக்கறை கொண்ட திமுக, கடந்த சில நாட்களாக கிராமம் கிராமமாக சென்று கிராம சபையை நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமின்றி அவரது மகனும் தற்போது கிராம சபையை நடத்தி வருகிறார். அவருடைய கிராம சபையை திமுகவின் மூத்த தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தூத்துகுடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கிராமசபையில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்க அதற்கு பதில் கூறிய உதயநிதி, 'எங்கள் தாத்தா இலவச டிவி கொடுத்தது போல், எங்க அப்பா செட்டாப் பாக்ஸ் கொடுப்பார் என்று கூறினார். உதயநிதியின் இந்த பதிலுக்கு நெட்டிசன்கள் கிண்டலுடன் கூடிய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்