‘மைனா’ நந்தினியின் கணவர் தற்கொலை - சின்னத்திரையினர் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (12:29 IST)
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் ‘மைனா’ நந்தினி. வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட சில திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.


 

 
முக்கியமாக விஜய் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி தொடரில் ‘மைனா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததில், இவரை பலரும் மைனா எனவே அழைத்து வந்தனர். மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவரில் ஒருவராகவும் அவர் இருந்துள்ளார். தற்போது, அவர் பல தொடர்களில் நடித்து வருகிறார்.
 
இவர் கார்த்திகேயன் என்பவரை கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி, காதல் திருமணம் செய்து கொண்டார். கார்த்திகேயன் சொந்தமாக ஜிம் ஒன்றை நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர்.


 

 
இந்நிலையில், நேற்று இரவு ஒரு விடுதியில் தங்கியிருந்த கார்த்திகேயன் குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
 
திருமணமாகி ஓராண்டு கூட முடிவைடையாத நிலையில், கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது, சின்னத்திரை கலைஞர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்